இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.
தென்னாப்பிரிக்க அணி 3 டி20 கிரிக்கெட் தொடர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு வந்துள்ளது. இதில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று திருவனந்தபுரத்தில் கிரீன் பீல்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய பேட்ஸ் மேன்கள் இருக்கின்றனர்.. அதேபோல ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் மற்றும் பவுலிங்கில் ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்ஷல் பட்டேல், தீபக் சஹர், அர்ஷ்தீப் சிங், ரவிசந்திரன் அஸ்வின், யூசுவேந்திர சாஹல் ஆகியோர் இருக்கின்றனர்.
கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய ஹர்திக் பாண்டியா மற்றும் வேக பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகிய இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காயம் காரணமாக தீபக் ஹூடாவும், கொரோனா தொற்று காரணமாக முகமது ஷமியும் விலகியுள்ளனர்.. அவர்களுக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சபாஷ் அகமது ஆகியோர் இந்திய அணியில் இணைவார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதேபோல இந்த தொடரையும் வென்று உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கின்றனர், கே எல் ராகுல் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.. அக்சர் பட்டேல் சிறப்பாக வீசுகிறார்.. மற்றபடி சொல்லும் அளவிற்கு செயல்படவில்லை.. காயத்திலிருந்து குணமடைந்து மீண்டு வந்த பும்ரா கடந்த ஆஸ்திரேலியா எதிரான தொடரில் கடைசி போட்டியில் ரன்களை (50) வாரி வழங்கினார்.. பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.. எனவே உலக கோப்பைக்கு முன்பதாக அவரும் பார்முக்கு திரும்ப இந்த போட்டியை பயன்படுத்தி கொள்ள வேண்டும்..
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்ற போதிலும் கடைசி டெத் ஓவர்களில் இந்திய பவுலர்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தனர். எனவே அதனை இந்த தொடரில் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்..
டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியில் குவின்ட்டடிக்காக ரிசா ஹென்றி மார்க்கம் டேவிட் மில்லர் டுடோரியல்
தென்னாப்பிரிக்க டி20ஐ அணி:
டெம்பா பவுமா (கே) தலைமையிலான அணியில் குயின்டன் டி காக், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகாராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னல், டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, ரிலீ ரோசோவ், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஜார்ன் ஃபோர்டுயின், மார்கோ ஜான்சன், ஆண்டிலே பெஹ்லுக்வாயோ.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் டி20 போட்டியில் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன அதில் இந்தியா 11 முறையும், தென்னாப்பிரிக்கா 8 முறையும் வென்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை..
All set for the #INDvSA T20I series. 👏#TeamIndia | @mastercardindia pic.twitter.com/UR4erC0zP4
— BCCI (@BCCI) September 27, 2022