இன்று ராஞ்சியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது தென்னாப்பிரிக்கா அணி. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்க அணி.. அதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றது. இதில் லக்னாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டி இன்று ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்குகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் 5ஆவது விக்கெட்டுக்கு ஹென்ரிச் கிளாசென் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் 106 பந்துகளில் 139 ரன்கள் குவித்த நிலையில், தென்னாப்பிரிக்காவை 249 ரன்களுக்கு அழைத்து சென்றனர். அதேபோல தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சால் ஆரம்ப 18 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்து தடுமாறியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஷ்ரேயஸ் ஐயர் தவிர தொடக்க வீரர்கள் அனைவருமே சொதப்பினர். அதன்பின் சஞ்சு சாம்சன் – ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்து சிறப்பாக கடைசி வரை போட்டியை எடுத்து சென்றனர். இருப்பினும் 9 ரன்களில் இந்திய அணி தோற்றது. சரியான தொடக்கம் கிடைக்காததே இந்திய அணிக்கு தோல்வியாக பார்க்கப்படுகிறது.
எனவே கடந்த முறை செய்த தவறை இந்த போட்டியில் செய்யாமல் இந்திய அணி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த போட்டியில் ருதுராஜ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரஜத் படிதார் இடம் பெறுவார் என தெரிகிறது.
கணிக்கப்பட்ட இந்தியா வரிசை:
ஷிகர் தவான் (கே), ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரஜத் படிதார், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (வி.கே), ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.
கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா வரிசை:
டெம்பா பவுமா (கே), குயின்டன் டி காக் (வி.கே), டேவிட் மில்லர், ஜான்மேன் மலான், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ஐடன் மார்க்ரம், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய அணி :
ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரஜத் படிதார், ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், முகேஷ் குமார், அவேஷ் கான், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர்.