Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSA : கடைசி ஒருநாள் போட்டி…. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1: 2 என்ற கணக்கில் பறி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும். இரண்டாவது போட்டியில் இந்தியாவும்  வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளும் 1:1 ஒன்று என சமநிலை வகிக்கிறது. இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லீ மைதானத்தில் 3ஆவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது.

இந்த மைதானத்தில் இந்தியா இதுவரை ஆடிய 20 ஒரு நாள் போட்டியில் 12 வெற்றியும், 7 தோல்வியும் கண்டிருக்கிறது. மற்றொரு ஆட்டத்தில் முடிவு எதுவும் இல்லை. தென்னாபிரிக்கா அணி இங்கு விளையாடிய ஒரே ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெறக்கூடிய போட்டி மழையால் பாதிக்கப்பட 40 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்க இருக்கிறது.

Categories

Tech |