2ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 278 ரன்கள் குவித்துள்ளது.
தென்னாபிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை தென்னாப்பிரிக்க அணி 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் இரு அணிகளிலுமே மாற்றங்கள் செய்யப்பட்டது அதன்படி இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரவி பிஷ்னாய் ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டு, அவர்களுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷபாஸ் அகமது ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
அதேபோல தென்னாபிரிக்க அணியில் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் சம்ஸி ஆகிய இருவருக்கு பதிலாக ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் பார்ச்சூன் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டனர். எனவே கேசவ் மகாராஜ் தலைமையில் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர்களான குயிண்டன் டி காக் 5 ரன்களும், ஜன்னிமன் மலன் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.. அதன்பிறகு ரீசா ஹென்றிக்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். இருவருக்குமே சதம் அடிக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது.. இருப்பினும் ஹென்றிக்ஸ் 76 பந்துகளில் 74 ரன்களும், மார்க்ரம் 89 பந்துகளில் 79 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.
பின் கடைசியில் ஹென்றிச் கிளாசன் 30 ரன்களும், டேவிட் மில்லர் 35 (34) ரன்கள் எடுக்க தென்னாபிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 278 ரன்கள் சேர்த்தது. கடைசியில் அடித்து ஆடக்கூடிய மில்லர் களத்தில் இருந்தும் டெத் ஓவர்களில் இந்திய அணி பந்துவீச்சாளர்களான ஆவேஷ் கான், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பாக பந்துவீசியதால் தென்னாப்பிரிக்க அணியால் 300 ரன்களை தாண்ட முடியவில்லை.. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
Impressive bowling helps India restrict South Africa to 278/7 👏
Will 🇿🇦 be successful in defending the total?#INDvSA | Scorecard: https://t.co/ZFqBOFe4EU pic.twitter.com/3ZNUFjxYJN
— ICC (@ICC) October 9, 2022