புனேவில் இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் ரோகித் சர்மா-மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்ற ரோகித் சர்மா இப்போட்டியில் 14 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த புஜாரா – மயாங்க் அகர்வால் ஜோடி நிதானமான ஆட்டத்தைக் கடைப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
நிதானத்துடன் பேட்டிங் செய்த புஜாரா டெஸ்ட் போட்டியில் தனது 22ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். மறுமுனையில், ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்து சிறப்பாக பேட்டிங் செய்துவந்த மயாங்க் அகர்வால் தனது ஐந்தாவது அரைசதத்தை அடித்தார். இந்த ஜோடி 138 ரன்கள் சேர்த்த நிலையில் புஜாரா 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய கேப்டன் கோலி களமிறங்கினார்.
That's another fine century from @mayankcricket 🙌👌 pic.twitter.com/6jWSOKwMUg
— BCCI (@BCCI) October 10, 2019
அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் அசத்தலான சத்தத்தை பதிவு செய்தார். அணியின் ஸ்கோர் 198 இருந்த போது ரபாடா பந்து வீச்சில் 195 பந்துகளில் 108 ரன் எடுத்த மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து ரஹானே களமிறங்கி ஆடி வருகின்றார். பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய கேப்டன் கோலி 19 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி 68 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்து ஆடி வருகின்றது.