இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1:0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன் பின் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 1:0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை நியூசிலாந்திடம் இழந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது..
நியூசிலாந்து தொடரில் ஓய்வளிக்கப்பட்ட மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் இந்த தொடரில் களமிறங்குகின்றனர். இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியும், இன்று மிர்பூரில் இந்திய நேரப்படி 11: 30 மணிக்கு மோதுகிறது..
இந்திய அணியில் முகமது ஷமிக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காயம் காரணமாக அவர் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.. எனவே ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல வங்கதேச அணியில் தமீம் இக்பால் காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக லிட்டன் தாஸ் அணியை வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி :
ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (WK), இஷான் கிஷன் (WK), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
பங்களாதேஷ் அணி :
லிட்டன் குமர் தாஸ் (கே), அனாமுல் ஹேக் பிஜோய், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், அபிஃப் ஹொசைன், யாசிர் ஆல் சவுத்ரி, மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், எபாடோட் ஹொசைன் சௌத்ரி, நசும் அகமது, மஹ்மூத் உல்லா, நஜ்முல் ஹொசைன் சாண்டோ, குவாஸி நூருல் ஹசன் சோஹன், ஷோரிஃபுல் இஸ்லாம்