Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG : பயிற்சியின் போது ரோஹித்துக்கு காயம்… அரையிறுதியில் ஆடுவாரா?

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் ஈடுபடும்போது கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் முடிவடைந்து குரூப் 2 வில் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதேபோல குரூப் 1 இலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நாளை (நவ.,9ஆம் தேதி) பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் அரை இறுதியில் மோதுகிறது. தொடர்ந்து 2ஆவது அரையிறுதியில் இந்திய அணி நவம்பர் 10ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் அடிலெய்டில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு வலைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மாவுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் வலியால் துடித்த ரோஹித் சிறிது நேரம் ஓய்வு பெற்றார். காயம்பட்ட இடத்தில் ஒரு ஐஸ்பேக் வைக்கப்பட்டது. மனநல பயிற்சியாளர் பேடி அப்டன் ரோஹித்திடம் பேசுவதை காண முடிந்தது. பின் தனது பயிற்சியை மீண்டும் தொடங்கினார் ரோகித் சர்மா.. இது சிறிய காயம் என்பதால் அவர் அரையிறுதி போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவாகாது என்று கூறப்படுகிறது.

அதே சமயம் இந்த டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் ரோஹித் சர்மா பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை. இதுவரையில் மொத்தம் 89 ரன்கள் மட்டுமே இரவு ரோஹித் குவித்துள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிராக ஒரு அரை சதம் அடித்தாரே தவிர மற்ற போட்டியில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரோஹித் செயல்படவில்லை. எனவே அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கலாம் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Categories

Tech |