Categories
கால் பந்து விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvSL : டி20யில் கேப்டன் பாண்டியா….. ஒருநாள் தொடரில் ரோஹித்…. இந்திய அணி அறிவிப்பு..!!

இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி வரும் 3ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2ஆவது போட்டி ஜனவரி 5ஆம் தேதி புனேயிலும், 3ஆவது போட்டி ஜனவரி 7ஆம் தேதி ராஜ்கோட்டிலும் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து ஒரு நாள் போட்டி கவுகாத்தியில் ஜனவரி 10ஆம் தேதியும், 2ஆவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் ஜனவரி 12ஆம் தேதியும், 3ஆவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் ஜனவரி 15ஆம் தேதியும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் டி20 தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுவார் எனவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஐபிஎல் ஏலத்தில் கோடிகளில் ஏலம் போன இளம் வேகபந்துவீச்சாளர்களான சிவம் மாவி, முகேஷ் குமார் ஆகியோர் புது வீரர்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டுள்ளார்.

அதன் பின் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கதேச தொடரில் சரியாக ஆடாத காரணத்தால் ஷிகர் தவான் கழட்டி விடப்பட்டுள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பை வர உள்ளதால் தொடக்க வீரர் வரிசைக்கு இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு முன்னுரிமை அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே தவானுக்கு இனிமேல் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். அதேசமயம் தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் விலகியிருந்த வேக பந்துவீச்சாளர் முகமது ஷமி அணியில் இடம்பிடித்துள்ளார்.

இலங்கை டி20 போட்டிகளுக்கான இந்திய அணி : 

ஹர்திக் பாண்டியா (C), சூர்யகுமார் யாதவ் (VC), இஷான் கிஷன் (WK), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.

இலங்கை ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வாரம்), இஷான் கிஷன் (வாரம்), ஹர்திக் பாண்டியா (விசி), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

Categories

Tech |