Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

INDvsPAK : எங்களுக்கு இது சாதாரண போட்டி தான்….. பாக். கேப்டன் பாபர் அசாம் ஓபன் டாக்..!!

இந்திய அணிக்கு எதிராக ஆடுவது பற்றி கேட்கப்பட்டதற்கு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பதிலளித்துள்ளார்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், 27 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. அதற்கு அடுத்த நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி பரம எதிரிகளாக கருதப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களுடைய மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.. இன்னும் சில வாரங்களில் இந்த போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்..

ஆசிய கோப்பை மட்டும் என்று எந்தவித தொடராக இருந்தாலும் சரி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதினாலே உலக ரசிகர்கள் அனைவரது கண்களும் இந்த போட்டியின் மீது தான் இருக்கும்.. இந்த இரு அணிகளும் மோதினாலே சமூக வலைதளங்களில் இது பற்றி ஒரே கருத்துக்களாக வந்து கொண்டிருக்கும்.. பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருவார்கள்.

ஆசிய கோப்பைக்கு முன்னதாக இரு அணிகளும் தலா 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன. இந்தியா ஜிம்பாப்வேயையும், பாகிஸ்தான் நெதர்லாந்தையும் எதிர்கொள்கிறது. ஒருநாள் போட்டிக்கான இரண்டாவது வரிசை அணியை இந்தியாவும், பாகிஸ்தான் முழு பலம் கொண்ட அணியையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக ஆடுவது பற்றி பாகிஸ்தான் அணியின்  கேப்டன் பாபர் அசாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, பாகிஸ்தான் எப்போதுமே அதை ஒரு சாதாரண விளையாட்டாகவே எடுத்துக்கொள்ளும். நாங்கள் மற்ற அணிகளுடன் விளையாடுவது போல இந்திய அணியுடன் விளையாடுவதையும் எப்போதும் போல  ஒரு சாதாரண போட்டியாக கருதி தான் விளையாடுவோம். ஆனால் அது இந்தியாவாக இருப்பதால், போட்டியில் வித்தியாசமான அழுத்தம் இருக்கிறது” என்று பதில் அளித்துள்ளார்.

நடப்பு ஆசிய கோப்பை சாம்பியனாக இந்தியா உள்ளது. இந்திய அணி 7முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் இதுவரை 2 முறை மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |