Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsSA : அடுத்தடுத்து விக்கெட்…. “தெறிக்கவிட்ட பவுலர்கள்”…. 106ல் சுருண்ட தென்னாப்பிரிக்கா..!!

தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 106 ரன்கள் எடுத்துள்ளது..

இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் டி20 போட்டி திருவனந்தபுரத்தின் கிரீன்பீல்டு ஸ்டேடியத்தில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி தென்னாபிரிக்க அணியின் தொடக்க வீரர்களாக குவிண்டன் டிகாக் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா இருவரும் களமிறங்கினர்..

தீபக்சஹர் வீசிய முதல் ஓவரிலேயே பவுமா டக்அவுட் ஆகி வெளியேறினார்.. அதன்பின் அர்ஷ்தீப் சிங்  2ஆவது ஓவரில் இரண்டாவது பந்தில் டிகாக் 1 ரன்னில் போல்டாகி வெளியேற,  5ஆவது பந்தில் ரிலீ ரோசோவ்வும் 0 ரன்னிலும், அதனைத் தொடர்ந்து வந்த மில்லரும் 6ஆவது பந்தில் போல்டாகி டக் அவுட்டில் வெளியேற தென்னாபிரிக்கா அணி 8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின் மீண்டும் தீபக் சாஹர் 3ஆவது ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் டக் அவுட் ஆக 9 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து  தத்தளித்தது.. அதனைத்தொடர்ந்து எய்டன் மார்க்ரம் மற்றும் வெய்ன் பார்னல் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.. இருவரும் சிறிது நேரம் தாக்குப்பிடித்த நிலையில், மார்க்ரம் 25 ரன்களில் ஆட்டமிழந்தனர்.. இதனால் தென்னாப்பிரிக்கா 100 ரன்களை தாண்டுமா என்பதே கேள்விக்குறியானது.

அதன் பின் பொறுமையாக ஆடிய பார்னல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.. கடைசியில் கேசவ் மஹாராஜ் ஓரளவு சிறப்பாக ஆடி வந்த நிலையில் 41 (35) ரன்களில் அவுட் ஆக இறுதியில் 20 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. ரபாடா 7 ரன்களும், அன்ரிச் நார்ட்ஜே 2 ரன்களும் எடுத்தநிலையில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும், தீபக் சஹர் மற்றும் ஹர்ஷல் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளும், அக்சர் படேல் 1 விக்கெட்டும் எடுத்தனர்.. தென்னாபிரிக்க வீரர்கள் 4 பேர் ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது..

Categories

Tech |