Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsSA : கெத்தாக நிற்கும் கோலி, ரோஹித்….. “பிரம்மாண்ட கட் அவுட் வைத்து”….. மகிழ்ந்த ரசிகர்கள்..!!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஐ முன்னிட்டு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் ரசிகர்கள்  திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் ஸ்டேடியம் முன் பெரும் ஃப்ளெக்ஸ் வைத்துள்ளனர்

தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20ஐ மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.. இந்த தொடருக்காக டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் அனைவரும் புறப்பட்டு கடந்த 25ஆம் தேதி  கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தனர்..  பின் அவர்களுக்கு அங்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..

அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரை வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் நேற்று திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தபோது, அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கேரளா ரசிகர்கள் திரண்டு வரவேற்பு செய்தனர்.. அதனைதொடர்ந்து இந்திய அணி பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று (28ஆம் தேதி) திருவனந்தபுரம் கிரீன் பீல்டு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது..

இந்தியாவின் தென்பகுதியில் உள்ளவர்கள், அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, கிரிக்கெட் வீரர்களாக இருந்தாலும் சரி, நடிகர்களாக இருந்தாலும் சரி, தங்கள் ஹீரோக்கள் மீது பாசத்தைப் பொழிவதற்கு ஒரு குறிப்பிட்ட வழியைக் கொண்டுள்ளனர். அதாவது அவர்கள் வித்யாசமாக எதாவது செய்வது வழக்கம்..

அந்தவகையில் திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ள தொடரின் முதல் போட்டிக்கு முன்னதாக அனைத்து கேரள ரோஹித் சர்மா ரசிகர்கள் சங்கம் இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கிரீன் பீல்டு ஸ்டேடியத்தின் முன்பாக பிரமாண்டமான கட் அவுட்டை உருவாக்கியது. மேலும் ரசிகர் மன்றமும் ட்விட்டரில், “கடவுளின் சொந்த நாட்டிற்கு ஹிட்மேனை நாங்கள் வரவேற்கிறோம்” என்று கூறியது. அதேபோல இந்திய வீரர் விராட் கோலிக்கும் அவரது கேரளா ரசிகர்கள் மன்றம் சார்பாக பெரிய பிரம்மாண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது.

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரது கட் அவுட்டுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு கேரளாவில் இந்திய அணியின் போட்டி நடப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

https://twitter.com/133_AT_Hobart/status/1574807292046094336

Categories

Tech |