Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsSA : என்ன ஆச்சு….. ஹூடா, பாண்டியா, ஷமி விலகல்…. காரணம் என்ன?….. களமிறங்கும் வீரர்கள் இவர்கள் தான்..!!

ஹர்திக் பாண்டியா, ஹூடா, ஷமிக்கு பதிலாக இந்திய அணியில் ஷாபாஸ் அகமது மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் உமேஷ் யாதவ் ஆகியோரை இந்திய அணி நிர்வாகம் சேர்த்துள்ளது.

இந்திய அணி தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை 2:1 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவுடன் மீண்டும் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது இந்திய அணி.. உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்த போட்டி இந்திய அணிக்கு மிகப்பெரிய பயிற்சியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கிடையே நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பிடித்திருந்த முகமது ஷமி கொரோனா தொற்றால் அதிலிருந்து விலகினார்.. ஷமி தனது கோவிட்-19 போரில் இருந்து மீளவில்லை. அவருக்கு இன்னும் கால அவகாசம் தேவை,

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் இருந்தும்  முகமது ஷமி நீக்கப்பட்டுள்ளார், ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் தொடருவார்” என்று பிசிசிஐ மூத்த வட்டாரம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு  பதிலாக ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடாவும் முதுகு வலி காரணமாக தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், தென்னாப்பிரிக்கா தொடருக்கு மிடில்-ஆர்டர் பேட்டர் ஸ்ரேயாஸ் ஐயரை திரும்ப அழைக்க தேசிய தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் டி20 செப்டம்பர் 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது.

தீபக் ஹூடா 2022 இல் தான் சர்வதேச அளவில் இந்திய அணிக்கு அறிமுகமானார், ஆனால் இந்திய அணியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். அதிரடியாக ரன்களைஎடுத்தும், சில ஓவர்கள் பகுதி நேர ஆஃப்ஸ்பின் வீசியும் சிறப்பாக செயல்படுகிறார்.. இந்திய லெவனில் இடம்பிடிக்க வேண்டிய முக்கிய வீரராக ஹூடா பார்க்கப்படுகிறார்.. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 ஐ தொடரில் இந்திய லெவனில் முதல் தர மூத்த வீரர்கள் அனைவரும் இடம்பிடித்ததால் அவர் பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டார்..

ஹூடாவின் காயத்தின் அளவு குறித்து பிசிசிஐ இன்னும் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை. அக்டோபரில் ஆஸ்திரேலியா செல்லவுள்ள 15 பேர் கொண்ட டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹூடா இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |