Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsWI : இவர்கள் தூக்கப்படுவார்களா?…. இந்த 2 பேருக்கும் வாய்ப்பு…. தகவல் இதோ..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், அதே நேரத்தில் இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களம் காண்பதால் ஆட்டத்தில் விறு விருப்புக்கு பஞ்சம் இருக்காது..

இரு அணி வீரர்களுமே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போட்டியினை ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் நாளைய நான்காவது போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த தொடரில் பேட்டிங்கில் சொதப்பி வரும் ஷ்ரேயஸ் ஐயரும், பந்துவீச்சில் சொதப்பி வரும் ஆவேஷ் கானும் நீக்கப்படலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் இருவருக்கும் பதிலாக இந்த தொடரில் விளையாடாத இரண்டு வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதன்படி இந்த தொடரில் விளையாடாத பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் மற்றும் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |