இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. இந்த நிலையில் இன்று 4ஆவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இதில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. அதே நேரத்தில் இதில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களம் காண்பதால் ஆட்டத்தில் விறு விருப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருகின்றனர். இந்நிலையில் இந்த போட்டியில் மோசமான வானிலை காரணமாக டாஸ் போடுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
🚨 Update From Lauderhill 🚨
Toss for the 4th #WIvIND T20I has been delayed due to bad weather.
Good news, the covers are off.
We will be back with further updates shortly#WIvIND pic.twitter.com/xRTz9Fxlxa
— BCCI (@BCCI) August 6, 2022