Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsZIM : இன்று கடைசி போட்டி…… ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே?…. வாஷ் அவுட் செய்யுமா இந்தியா?

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்று வருகிறது.  முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது.

இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்திய நேரப்படி மதியம் 12:45 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்ட நிலையில், இந்த போட்டியிலும் வென்று வாஷ் அவுட் செய்ய இந்திய அணி தயாராகி வருகிறது.. அதேசமயம் இந்த போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெற வேண்டும் என்று ஜிம்பாப்வே அணி களத்தில் போராடுமா என்பதை இன்றைய ஆட்டத்தில் காணலாம்..

இந்திய அணியின் உத்தேசபட்டியல் : 

ஷிகர் தவான்/ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷுப்மான் கில்/ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் (வி.கே.), தீபக் ஹூடா, அக்சர் படேல்/ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், அவேஷ் கான், முகமது சிராஜ் /தீபக் சாஹர், குல்தீப் யாதவ்.

ஜிம்பாப்வே அணியின் உத்தேசபட்டியல் : 

தடிவானாஷே மருமணி, சீன் வில்லியம்ஸ், இன்னசென்ட் கையா, வெஸ்லி மாதேவெரே, சிக்கந்தர் ராசா, ரெஜிஸ் சகாப்வா (கேப்டன் & wk), டோனி முனியோங்கா, லூக் ஜாங்வே, ரிச்சர்ட் ங்கராவா, பிராட் எவன்ஸ், விக்டர் நியாச்சி

Categories

Tech |