கே எல் ராகுல் திடீரென ஜிம்பாப்வே தொடரில் சேர்க்கப்பட்டதற்கு இதுதான் தான் காரணம் என சொல்லப்படுகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை .ஏனெனில் அவர் காயம் காரணமாக அவதிப்பட்டதன் காரணமாக ஐபிஎல் தொடருக்கு பின் எந்த ஒரு தொடரிலும் பங்கேற்கவில்லை.. தென்னாப்பிரிக்க தொடர் தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின் காயம் ஏற்பட்டதால் அவர் அந்த தொடரில் இருந்து விலகி ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தென்னாபிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து என அடுத்தடுத்த தொடர்களிலும் கே.எல் ராகுல் பங்கேற்கவில்லை.. இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், திடீரென கடைசி கட்டத்தில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.. அதன் காரணமாக அந்த தொடரிலும் அவர் விளையாடவில்லை.. இந்நிலையில் அக்டோபர் மாதம் டி20 உலக கோப்பை நடைபெறுவதற்கு முன் ஆசிய கோப்பை தொடர் மட்டுமே இருக்கிறது..
இந்த நிலையில் முழு உடல் தகுதி எட்டிய கே எல் ராகுல் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்தது மட்டுமின்றி துணைக் கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பைக்கு முன்னதாக ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ஷிகர் தவான் அறிவிக்கப்பட்ட நேரத்தில், திடீரென பிசிசிஐ நேற்று ஜிம்பாப்வே தொடரில் கே.எல் ராகுலும் இணைவார் என்ற ஒரு புதிய தகவலை வெளியிட்டது..
அதுமட்டுமில்லாமல் இந்த தொடரில் கே.எல் ராகுல் தான் கேப்டன் என்று தெரிவித்தது. ஏன் திடீரென பிசிசிஐ திடீரென தவானை நீக்கிவிட்டு கே.எல் ராகுலை கேப்டனாக நியமித்தது என்று புரியாத சூழல் நிலவியது. இதற்கு காரணம் என்னவென்றால் இந்த தொடர் விளையாடுவதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.. ஏனெனில் காயம் காரணமாக அனைத்து தொடர்களிலும் விளையாடாத கே.எல் ராகுல் திடீரென நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்டது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விவாதத்தை கிளப்பியது.
ஏனென்று காரணம் கேட்டால் எந்த தொடரிலும் பங்கேற்காமல் திடீரென ஆசியக் கோப்பையில் விளையாடுவது எப்படி என்று பலரும் கேள்வியை எழுப்பி வந்தனர். இந்த வேளையில் ஆசிய தொடருக்கு முன்னதாக ஜிம்பாப்வே தொடரில் அவர் விளையாட ஆரம்பித்தால் நிச்சயம் நல்ல பார்மை எட்டுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் ஜிம்பாப்பை தொடரில் சிறப்பாக ஆடினால், அதே உத்வேகத்துடன் ஆசிய கோப்பையிலும் சிறப்பான செயலை காட்டுவார் என்பதன் காரணமாகவே திடீரென அவசர அவசரமாக பிசிசிஐ ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுலை சேர்த்தது மட்டுமின்றி, அவரை கேப்டனாகவும் ஆக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
NEWS – KL Rahul cleared to play; set to lead Team India in Zimbabwe.
More details here – https://t.co/GVOcksqKHS #TeamIndia pic.twitter.com/1SdIJYu6hv
— BCCI (@BCCI) August 11, 2022