Categories
தேசிய செய்திகள்

ஜார்கண்ட் மாநில… சுகாதாரத்துறை அமைச்சருக்கு… கொரோனா தொற்று…!!

ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முன்கள பணியில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் பலர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேச மாநில சுகாதாரத்துறை இணை அமைச்சர் அதுல் கார்க், தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தகவலை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், இன்று மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களில், தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |