அபுதாபியில் சானிட்டைசரால் சிறுமி ஒருவருடைய கண்ணின் கருவிழிப் படலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபுதாபியில் 4 வயது சிறுமி ஒருவர் அவருடைய பெற்றோருடன் வணிக வளாக பகுதிக்கு சென்றிருந்த நிலையில் அங்கிருந்த சானிட்டைசர் ஜெல் போன்ற எந்திரத்தை தனது காலினால் அழுத்தியுள்ளார். அதிலிருந்து வெளிவந்த ஜெல்லானது சிறுமியுடைய கண்ணில் பீய்ச்சி அடித்துள்ளது. அதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர் அவருடைய கண்ணில் விழுந்த சானிட்டைசரை தண்ணீரால் கழுவியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் கண்ணில் சானிடைசர் விழுந்ததால் சிறுமியுடைய கண்ணின் கருவிழிப் படலம் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் தற்போது அந்த சிறுமிக்கு பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இவ்வாறு எந்திரங்களின் அருகே செல்லும் போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.