இன்ஃபினிக்ஸ் நிறுவனம் ஹாட் 7 சீரிஸ் (Hot 7 Series) ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
கடந்த மாதம் இந்நிறுவனம் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ (Infinix Hot 7 Pro) ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், தற்போது இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 ப்ரோ மாடலை விட உயர்ந்த வெர்ஷனை அறிமுகம் செய்ய போகிறது. இந்த ஸ்மார்ட்போன் இன்ஃபினிக்ஸ் ஹாட் 7 (Infinix Hot 7) என்று அழைக்கப்பட உள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த போனின் விலை இதுவரை இல்லாத வகையில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளிப்கார்ட் தள விவரங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போனில் மொத்தம் 4 கேமராக்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இத்துடன் நாட்ச் டிஸ்ப்ளே (Notch Display), டூயல் செல்ஃபி கேமராக்கள் (Dual selfie cameras) வழங்கப்படுகிறது.
ஸ்மார்ட்போனின் பிரைமரி கேமரா (Primary camera) பற்றி இதுவரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை. இத்துடன் ஆக்டா-கோர் பிராசஸர் (Octa-core processor), 4 G.B.RAM , 64 G.B. மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் மெமரியை தேவைப்பட்டால் கூடுதலாக நீட்டிக்கும் வசதியும், பிரத்யேக மைக்ரோ S.D கார்டு ஸ்லாட் வழங்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 10,000 பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.