ஜெர்மன் நாட்டில் கடந்த 50 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, போர் தொடுக்க தொடங்கியவுடன், சர்வதேச நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை அறிவித்தன. எனவே, ரஷ்யா கச்சா எண்ணெயின் விலையை அதிகரித்தது. இதனால், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் எண்ணெய், சமையல் எரிவாயு, எரிபொருள் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்தது. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் நுகர்வு பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
அதன்படி ஜெர்மன் நாட்டில் கடந்த மாதத்தில் 8.8% -ஆக உயர்ந்திருக்கிறது. இது, அந்நாட்டில் 50 வருடங்களில் இல்லாத வகையில் கடுமையான அதிகரிப்பாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐரோப்பிய மத்திய வங்கியின் வட்டி விகிதமும் உயரும் என்று கூறப்பட்டிருக்கிறது.