சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1000யை தாண்டியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது கடந்த ஒரு வார காலமாக பரிசோதனை எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மூன்று முறை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 100யை கடந்திருக்கிறது. இன்றைய தினம் பெண் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 88 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேலம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் மொத்த எண்ணிக்கை 1034 ஆக அதிகரித்துள்ள நிலையில் 488 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.