சென்னையில் நேற்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மொத்த எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 571 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் நேற்று மட்டும் புதிதாக 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நிலையில் இன்று ராயபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ராயபுரம் – 571 ,
கோடம்பாக்கம் – 563,
திரு.வி.க நகரில் – 519,
ராயபுரம் – 571,
அண்ணா நகர் – 248,
தேனாம்பேட்டை – 360,
தண்டையார் பேட்டை – 231,
வளசரவாக்கம்- 274,
அம்பத்தூர் – 167,
அடையாறு – 159,
திருவொற்றியூர் – 64,
மாதவரம் – 46,
பெருங்குடி – 35,
சோளிங்கநல்லூர் – 25,
ஆலந்தூர் – 25,
மணலி – 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.