சீனாவில் இன்ஃபா சூறாவளி தாக்கத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் இன்ஃபா சூறாவளியால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டாவது முறையாக கடந்த திங்கட்கிழமை அன்று ஸீஜியாங் மாநிலத்தை இன்ஃபா அதிதீவிரமாக தாக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூறாவளியால் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்ததோடு மின் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவையும் வேரோடு சாய்ந்துள்ளது. இதற்கிடையே பலத்த மழையும் பெய்துள்ளதால் ஜியாங்சு, ஸீஜியாங் ஆகிய மாநிலங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தலைநகர் பெய்ஜிங்கிலும் இன்ஃபா சூறாவளியின் தாக்கத்தால் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதிகாரிகள் தாழ்வான இடத்தில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதோடு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்வி கூடங்கள், அங்காடிகள் உள்ளிட்டவற்றை மூடவும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.