Categories
சினிமா தமிழ் சினிமா பேட்டி

ஏ.ஆர் முருகதாஸின் “தளபதி 65” குறித்த தகவல்…ஆவலுடன் ரசிகர்கள்….!

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “தளபதி 65” குறித்த தகவலை ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடித்து முடித்து அதைத்தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸுடன் தனது 65வது படத்தில் இணைய உள்ளார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இதுகுறித்து வேறு எந்த அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. கொரோனா ஊரடங்கு முடிந்த பின் இதன் அறிவிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூக வலைத்தள பேட்டியில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இந்த படம் குறித்து பேசியுள்ளார்.

அதில், மீண்டும் நீங்கள் விஜய் சாருடன் படம் பண்றது உண்மையா?. அது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமா?, என்ற கேள்விக்கு அவர் கூறுகையில் “எந்த படத்தின் தொடர்ச்சியாகவும் இல்லாமல் ஓப்பனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என்னோட கருத்து. ஒரு படத்தின் தொடர்ச்சி என்பது மீண்டும் ஒரு வட்டத்திற்குள்ளேயே போட்டு அடைப்பது போல இருக்கும். அதையும் தாண்டி யோசிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். சமூக வலைதளங்களில் எனக்கு துப்பாக்கி படத்தின் தயாரிப்பாளர் தலைப்பு கொடுக்கவில்லை என்று கூறுவதெல்லாம் பொய். இதனால் படத்தில் சிக்கல் என்பதெல்லாம் இல்லை. இதுபோன்ற படம் குறித்து தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து முறையான அறிவிப்பு கிடைத்தால் தான் சரியாக இருக்கும்.” இன்று ஏ.ஆர் முருகதாஸ் பதிலளித்துள்ளார்.

Categories

Tech |