தமிழ் மொழியைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இப்போது பார்க்கலாம். இந்த உலகத்தில் வாழ்கின்ற சுமார் 9 கோடி மக்கள் தமிழ் மொழியை பேசுகின்றனர். உலகில் மொத்தம் 6809 மொழிகள் உள்ளன. இதில் எழுத்துக்களை கொண்ட மொழிகள் 100 ஆகும். அதில் ஆறு மொழிகள் பழமையான மொழிகள் ஆகும். அவை எதுவென்றால் ஹீப்ரு, கிரேக்க மொழி, லத்தீன், சமஸ்கிருதம், சீன மொழி மற்றும் தமிழ். ஆனால் இதில் தமிழ், சீன மொழி மற்றும் ஹீப்ரு ஆகிய மொழிகள் தான் பேச்சு மற்றும் எழுத்து வடிவில் உள்ளது. இதற்காக தமிழர்களான நாம் பெருமை கொள்ள வேண்டும். உலகில் மனிதர்களுக்கு தெரிந்த முதல் மொழி தமிழ் மொழிதான் என்று ஆய்வாளர் அலெக்ஸ் காலியர் கூறியுள்ளார்.
சுமார் 20,000 வருடங்களுக்கு முன்பாக தமிழ்மொழி தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. உலகத்தில் தமிழ் பேசத் தெரிந்த மக்களுள் ஒரு கால் பகுதி மக்களுக்கு தமிழ் மொழியை வாசிக்கவோ எழுதவோ தெரியாது. நம் தமிழ் மொழி திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழியாகும். தமிழ்மொழி பரவலாக தமிழ்நாடு, இலங்கை பாண்டிச்சேரி ஆகிய இடங்களில்தான் பேசப்படுகின்றது. தமிழ்நாடு, சிங்கப்பூர், புதுச்சேரி மற்றும் இலங்கை ஆகிய இடங்களில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. அம்மா என்கின்ற வார்த்தையானது தமிழ்மொழியின் அழகியலை உணர்த்துகிறது. அ என்பது உயிரெழுத்தையும் ம் என்பது மெய் எழுத்தையும் மா என்பது உயிர்மெய் எழுத்தையும் குறிக்கின்றது. தமிழ்மொழியில் ஏறத்தாழ 22 வகை வழக்கு தமிழ்கள் உள்ளன.