Categories
உலக செய்திகள்

ஒரு முறையாவது துரோகம்…. செய்வது ஆண்களா? பெண்களா? – ஆய்வில் தகவல்…!!

கணவன் மற்றும் மனைவி இருவரில் ஒருவர் 1 முறையாவது நம்பிக்கை துரோகம் செய்வதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

திருமணமான பிறகு கணவன் தன்னுடைய மனைவியையும், மனைவி தன்னுடைய கணவனையும் நம்பி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். மேலும் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யாமல் வாழ வேண்டும். இந்நிலையில் இந்தியர்களில் 55 சதவீதம் பேர் குறைந்தது ஒருமுறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் செய்கின்றனர் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவர்களில் பெண்கள் 56% அதிகம். மேலும் ஒரே நேரத்தில் இரண்டு பேரை காதலிக்கலாம் என்று 48% பேர் கருதுகின்றனர். சென்னை உட்பட முக்கிய நகரங்களில் திருமணமானவர்களிடம் பிரபல கிளீடன் செயலி இந்த ஆய்வை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |