உலகளவில் 40 % இதய நோயாளிகள் இந்தியாவில் இருக்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல செய்தி நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா , நொவர்டிஸ் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களிடையே இதய நோய் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘பீட் ஹார்ட் ஃபெயிலியர்’ என்ற நிகழ்ச்சியை முக்கிய பல நகரங்களில் நடத்தியது.மும்பையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மருத்துவதுறையை சார்ந்த பல்வேறு கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உலகளவில் 40 % இதய நோயாளிகளில் இந்தியாவில் உள்ளார்கள் என்றும் , 2.60 கோடி இந்தியர்கள் இதயம் சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது.மேலும் இது குறித்து மக்களிடம் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். இந்த நோய் மற்ற னியை போல முதலிலேயே கொடூர வலியுடன் வராது , இதயம் சார்ந்த நோய்கள் முதலில் லேசாக தொடங்கி பின்னர் தான் கடுமையான வலியை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.