Categories
உலக செய்திகள்

5 ஆண் மற்றும் 10 பெண் குழந்தைகள்… 16ஆவது குழந்தையுடன் கர்ப்பிணியாக இருக்கும் பெண்… குடும்பத்தின் வார செலவு எவ்வளவு தெரியுமா?

15 குழந்தைகளைப் பெற்ற தாய் தற்போது 16 வது முறையாக கர்ப்பமாக உள்ள நிலையில் அவர்களது குடும்ப செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருக்கும் வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்த தம்பதியினர் கார்லோஸ்-ஹெர்னாண்டஸ்.  இத்தம்பதிகளுக்கு 15 குழந்தைகள் ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது ஹெர்னாண்டஸ் மீண்டும் கர்ப்பமாக உள்ளார். 15 குழந்தைகளில் 10 பெண் குழந்தைகளும் ஐந்து ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதில் 6 பேர் இரட்டையர்கள். 15 குழந்தைகளின் பெயரும் சி என்ற எழுத்தில் தொடங்கும் படி வைத்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஹெர்னாண்டஸ்க்கு 16வது குழந்தை பிறக்கும் என கூறப்பட்டுள்ளது.

இத்தனை குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ஒரு  வாரம் மளிகை சாமான்கள் மற்றும் துணிகளுக்காக மட்டுமே 375 யூரோக்கள் செலவாகின்றது . அதோடு குடும்பத் தலைவரான கார்லோஸ் தனது குடும்பத்தினருடன் பயணிக்க பேருந்து ஒன்றை வாங்குவதற்கும் திட்டமிட்டுள்ளார். ஹெர்னாண்டஸ் கூறுகையில், “அனைத்து குழந்தைகளையும் பார்த்துக் கொள்வது மிகவும் சவாலான ஒன்று. குழந்தைகள் பலரும் ஒரேசமயத்தில் அழும்போது மிகுந்த மன அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனாலும் ஒரு தாயாக இருப்பதால் ஆசிர்வாதம் பெற்றவளாக கருதுகிறேன். 2008 ஆம் வருடம் முதல் முறையாக கருவுற்றேன். ஒரு குழந்தை பிறந்து அடுத்த மூன்று மாதத்திற்குப் பிறகு மீண்டும் கர்ப்பம் அடைந்து விடுவேன். அனைத்து குழந்தைகளும் எனது குழந்தைகள் தானா என்று பலர் என்னிடம் கேட்டதுண்டு. இத்தனை குழந்தைகள் எனக்கு பிறக்கும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என கூறியுள்ளார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |