Categories
உலக செய்திகள்

தகவல் தனியுரிமையை மனித உரிமையாக பார்க்க வேண்டும் – சத்ய நாதெல்லா

தகவல் தனியுரிமையை மனித உரிமையாகப் பார்க்க வேண்டும் என மைக்ரோசாப்ட் தலைமை செயக் அலுவலர் சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார்.

ஸ்விட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார மான்றத்தின் (World Economic Forum) 2020 ஆண்டு விழாவில் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அலுவலர் சத்ய நாதெல்லா கலந்துகொண்டார்.

அப்போது, அம்மன்றத்தின் நிறுவனரும், செயல் தலைவருமான கிளாஸ் ஸ்வாப்புடன் உரையாற்றிய நாதெல்லா, வாடிக்கையாளரின் தகவல்களை அவர்களின் அனுமதியுடன், சமூக நலனுக்காகப் பயனுபடுத்த வேண்டியதை நாம் உறுதி செய்ய வேண்டியது அவசியம். தகவல் தனியுரிமையை (Data Privacy) மனித உரிமையாகவே பார்க்க வேண்டும். அதனை பாதுகாத்தல் வேண்டும். வெளிப்படைத் தன்மை வேண்டும்” என்றார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்ய நாதெல்லா, 2014ஆம் ஆண்டு முதல் உலகின் மிகப் பெரும் தொழிற்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்டின் தலைமை செயல் அலுவலராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

Categories

Tech |