Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்…. 122 கிலோ பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் அதிரடி கைது….!!

புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் 122 கிலோ புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுரை மாவட்ட போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரின் உத்தரவின் அடிப்படையில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்களின் விற்பனையை தடுக்க ஜெயஹிந்த்புரம் சப்-இன்ஸ்பெக்டர் சக்திமணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது 2 பைகளில் பாக்கு, புகையிலை போன்ற போதை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஆட்டோவில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தியபோது தெற்குவாசல் பகுதியில் இருக்கும் குடோனில் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனை அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த 122 கிலோ பாக்கு மற்றும் புகையிலையை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த தெற்கு வாசல் பகுதியை சேர்ந்த ரவிசங்கர், மாடக்குளத்தை சேர்ந்த ரஞ்சித்குமார், மற்றும் ரவிசந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |