Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்… மதுவிற்ற 5 பேர் கைது… 133 பாட்டில்கள் பறிமுதல்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மல்லசமுத்திரம் பகுதியில் மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் காவல்துறையினர் மல்லசமுத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து ஆத்துமேடு, ராமபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்கலபுரத்தை சேர்ந்த சிவக்குமார், குமார் மற்றும் ஆத்துமேட்டு பகுதியை சேர்ந்த மணிகண்டன், லட்சுமணன், முருகன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 133 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |