Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தினர் அணியும் சீருடையில் மாற்றம்.!!

வானிலை மற்றும் சில காரணங்களால்  இந்திய ராணுவத்தினர் அணியும் சீருடையில் சில மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ராணுவ வீரர்கள்  முன்னதாக காட்டன் துணியால் தைக்கப்பட்ட ராணுவ சீருடைகளை பயன்படுத்தி வந்தனர். பின்னர்  காட்டன் துணிகளை பராமரித்து வருவதில் சிரமம் ஏற்பட்டதால் டெர்ரிகோட் துணியாலான சீருடைகளை தற்போது ராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சீருடை  கோடை காலத்திலும், ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போதும் சரியாக பொறுந்துவதில்லை என்று கூறப்படுகிறது.

Related imageஎனவே போர் சூழல் மற்றும்  வானிலையை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு  ராணுவ சீருடைகள்  மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ராணுவத்தினர் அணியும் சீருடையின் நிறத்திலும் , சீருடையில் பதவியை குறிக்கும் பட்டைகள் இருக்கும் இடத்திலும் சில மாற்றங்கள் கொண்டு வர உள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |