உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் தன்னுடைய நிறுவனத்தில் புதியதாக 55 ஆயிரம் ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் பின்வருமாறு, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் தன்னுடைய நிறுவனங்களில் 55 ஆயிரம் ஊழியர்களுக்கு வேலை கொடுக்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுலீல் பரேக் கூறுகையில், “மொத்தம் 55 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இதில் 52 ஆயிரம் பேர் இந்தியாவிலும் மீதமுள்ள 3 ஆயிரம் பேர் பிற நாடுகளிலும் பணியமர்த்தப்படுவர். ஊழியர்களின் திறனை மேம்படுத்த சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்படும்.” என அவர் கூறியுள்ளார்.