Categories
தேசிய செய்திகள்

இன்ஃபோசிஸ் தலைவர் திடீர் ராஜினாமா…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பதவிகளில் ரவிக்குமார் பணியாற்றி வருகிறார். இவர் 2002 ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸில் சேர்ந்தார். அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு இன்போசிஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்து 2017 ஆம் ஆண்டில் அவர் துணை சிஓஓ னவாக பெயரிடப்பட்டார். இன்போசிஸ் நிறுவனத்தின் அனைத்து தொழில் பிரிவுகளிலும் தலைவராக ரவிக்குமார் வழிநடத்தினார். அவரது தலைமையில் இன்போசிஸ் நிறுவனம் மிகச் சிறப்பாக இயங்கி நல்ல லாபத்தை பெற்றது.

இந்நிலையில் திடீரென இன்போசிஸ் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா செய்துள்ளார். ஆலோசனை, தொழில்நுட்பம், உள்கட்டமை, பொறியியல் மற்றும் சிறப்பு டிஜிட்டல் விற்பனைகளை அவர் வழி நடத்தினார். அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் ரவிக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார். ராஜினாமா செய்வதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இன்போசிஸ் நிறுவனத் தலைவர் ராஜினாமா காரணமாக நிறுவனத்தின் பங்குகள் சரிய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |