ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலிலுள்ள விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நாட்டு மக்களை அங்குள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அப்பகுதியிலுள்ள வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளார்கள். இதனால் விமான நிலையத்தின் வெளியே பாதுகாப்பு ரீதியாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க தூதரகம் அமெரிக்க மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது அமெரிக்க குடிமக்கள் எவரும் காபூல் விமான நிலையத்தின் முன்பு கூட வேண்டாம் என்பதாகும். மேலும் அமெரிக்க தூதரகம் கூறியதாவது, அமெரிக்க மக்களில் எவரெல்லாம் repatriation assistance என்னும் படிவத்தை பூர்த்தி செய்யவில்லையோ அவர்கள் கூடுமானவரை விரைவாக அதனை பூர்த்தி செய்யவும் என்று கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து விமானம் தொடர்பாக ஆப்கானிஸ்தானிலிருக்கும் அமெரிக்க வாசிகள் எவரும் அமெரிக்க தூதரகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த repatriation assistance என்னும் படிவத்தின் மூலம் நாங்களே விமானத்தில் காக இதில் பதிவு செய்தவர்களை தொடர்பு கொள்வோம் என்றும் கூறியுள்ளார்கள்.