இங்கிலாந்து அரசு வெளியிட்ட பட்டியலிலுள்ள துறைகளை சேர்ந்தவர்களில் 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றிருப்பவர்களுக்கு மட்டும் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அரசாங்கம் 16 துறைகளையுடைய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளில் பணியாற்றுபவர்கள் தொற்று பாதித்தவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்கள். இதனால் இந்த 16 துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் சுய தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 16 துறைகளை சேர்ந்த தொழிலாளர்களில் எவரெல்லாம் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டார்களோ அவர்களுக்கு மட்டும் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
மேலும் தினசரி பார்க்கப்படும் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்படவில்லை என்றால் மட்டுமே அவர்கள் தங்களுடைய வேலையை செய்யவேண்டும் என்றும், தொற்று உறுதி செய்யப்பட்டால் மீண்டும் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்றும் இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.