பிரான்ஸில் வாழும் இங்கிலாந்து நாட்டு மக்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் Carte de sejour என்னும் வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் அவர்கள் பிரான்ஸ் நாட்டு காவல்துறை அதிகாரிகளால் நாடு கடத்தப்படுவார்கள் என்று இங்கிலாந்து தூதர் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் வாழும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் ரெட்டைக் வாழிட உரிமம் பெற்றிருப்பவர்களையும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும் தவிர மற்ற அனைத்து இங்கிலாந்து நாட்டவர்களும் carte de sejour என்னும் குடியுரிமை திட்டத்தில் ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிக்க தவறும் பிரான்ஸ் வாழ் இங்கிலாந்து பொதுமக்கள் சட்ட விரோதமாக பிரான்ஸ் நாட்டிற்குள் புகுந்தவர்களாக கருதப்படுவார்கள். அதோடு மட்டுமின்றி அவர்கள் பிரான்ஸ் நாட்டு காவல்துறை அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு நாடு கடத்தபடுவார்கள்.
இதனையடுத்து இவ்வாறு குடியுரிமை திட்டத்தில் விண்ணப்பிக்கவில்லை என்றால் பிரான்ஸ் வாழ் இங்கிலாந்து பொதுமக்கள் பிரான்சில் வேலை செய்வதற்கும், மருத்துவ உதவி பெறுவதற்கும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பிரான்ஸ் நாட்டிற்கான இங்கிலாந்து தூதர் எச்சரித்துள்ளார்.