இங்கிலாந்தின் மீண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பால், நாடு மீண்டும் முடக்கப்படலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், மீண்டும் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மற்றொரு முறை இங்கிலாந்தை முடக்குவது கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். மேலும் ஸ்பெயினை போன்று கொரோனா பாதிப்பு இங்கிலாந்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டை மடக்குவதை தவிர வேறு எந்த ஒரு வழியும் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஒரு சீரற்ற இலையுதிர் காலம் மற்றும் குளிர் காலத்தை எதிர் நோக்கும் போது, அதிக அளவில் தொற்றுகள் ஏற்பட போகிறது என்று மூட்டு அதிகாரிகளில் ஒருவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி ஜூன் மாதத்தை ஒப்பிடுகையில் தற்போது உள்ள நிலைமையில் கொரோனா தொற்றுகள் இரட்டிப்பாக மாறியுள்ளன. இப்படி ஒரு சூழ்நிலையில் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்ற நிலையில், தொற்றுகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் பொது சுகாதார கண்காணிப்பு அமைப்பின் கணக்கெடுப்பில், கடந்த வாரத்தில் 5,763 ஆக இருந்த பாதிப்பு, தற்போது 6,418 ஆக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரையில் மட்டும் 11% கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசின் பாதுகாப்பான பயண பட்டியலில் இருந்து எடுக்கப்பட்ட பல ஐரோப்பிய நாடுகளைவிட இங்கிலாந்தின் சில பகுதிகளில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கின்றது.