வியாபாரியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அத்திமரப்பட்டி பகுதியில் வேல்முருகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையின் ஓரத்தில் பழம், தேங்காய் போன்ற பொருட்களை வைத்து விற்பனை செய்து வருகின்றார். அவ்வாறு விற்பனை செய்து முடித்த பிறகு மீதி உள்ள பொருட்களை வேல்முருகன் அதே பகுதியில் வசிக்கும் ஆத்திப்பழம் என்பவரின் வீட்டில் வைத்துவிட்டு அதன் பிறகு காலையில் மீண்டும் அவரின் வீட்டிற்கு சென்று மீதி உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு விற்பனை செய்வது வழக்கம். அவ்வாறு வேல்முருகன் மீதி உள்ள பொருட்களை ஆத்திப்பழத்தின் வீட்டில் வைப்பது அவரின் மகனான திருமணி என்பவருக்கு பிடிக்காததால் வேல்முருகனிடம் நீங்கள் இனிமேல் பொருட்களை இங்கு கொண்டு வந்து வைக்கக்கூடாது என்று அவரிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு ஆத்திப்பழம் தனது மகனிடம் அவர் இங்கு தான் கொண்டுவந்த வைப்பார் என்று கூறி திருமணியை திட்டி உள்ளார்.
இதனையடுத்து வேல்முருகன் பழங்களை விற்பனை செய்து விட்டு மீதி இருந்த பழங்களை ஆத்திபழம் வீட்டில் வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது திருமணி மீண்டும் வேல்முருகனிடம் தகராறு செய்து கொண்டிருக்கும் போது தந்தையை பார்த்தும் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்நிலையில் வேல்முருகன் தனது வீட்டின் பக்கத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது திருமணி வேல்முருகனின் வீட்டிற்கு சென்று திடீரென தான் மறைத்து இருந்த அரிவாளை எடுத்து வேல்முருகனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த வேல்முருகன் அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து வேல்முருகனை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வேல்முருகன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற திரு மணியை தேடி வருகின்றனர்.