டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடந்துள்ளது. அதில் இரண்டு அணிகளும் தலா இரண்டு வெற்றிபெற்று தொடரில் சமநிலை பெற்றுள்ளனர். டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனால் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்களை நிரப்பியது.
கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 80 ரன்கள் அடித்துள்ளார். ரோகித் சர்மா 34 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். சூரியகுமார் யாதவ் 32 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் எடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து 225 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாட களமிறங்கியது. அந்த அணியின் ஜேசன் ராய் 2வது பந்தில் அவுட்டானார்.
பட்லர் உடன் டேவிட் மதன் ஜோடி சேர்ந்த உடனே இந்திய பந்துவீச்சாளர்களை இந்த ஜோடி முன்னேறி சென்றனர். பட்லர் 52 ரன்னில் அவுட்டானார் அடுத்து இறங்கிய ஃபேஸ் டோ மற்றும் டேவிட் மனை ஷர்துல் தாகூர் ஒரே ஓவரில் வீழ்த்தியுள்ளார். இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3-2 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்தப் போட்டியின் விருது புவனேஷ்வர் குமாருக்கும், விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.