புதுச்சேரியில் இனி 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் கடைகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே பொதுமக்கள் வெளியே வருகின்றன. இந்நிலையில் இதனை காரணமாக வைத்து வெளியே கூட்டமாக நடமாடுவதை காணமுடிகிறது.
இதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், புதுச்சேரி முதல்வர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால், இனி புதுச்சேரியில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு மூன்றில் ஒரு பங்கு அரசு ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர் என்றும், விவசாய பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.