இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களிலும் ஏர்பேக் பொருத்துவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு இந்தியாவின் அனைத்து கார்களிலும் ஓட்டுனர் முன்பக்கம் உள்ள பயணிகளின் இருக்கைகளிலும் ஏர்பேக கட்டாயமாக செலுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் இந்தியாவில் விற்பனை செய்யக்கூடிய சில கார் நிறுவனங்கள் ஓட்டுனரின் முன் பக்க பயணி இருக்கையில் ஏர்பக் பொருத்தி வெளியிடப்பட்டுள்ளது. அவை மாருதி சுசுகி ஆல்டோ மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ மாருதி சுசுகி செலிரியோ மாருதி சுசுகி வேகன்ஆர் ஹூண்டாய் சான்ட்ரோ ரொனால்டோ க்விட் டாட்சன் ரெடி கோ மகேந்திரா பொலிரோ ஆகிய கார் நிறுவனங்கள் பயணி இருக்கையின் பொருத்திய புதிய கார்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசு ஏப்ரல் 1 தேதி 2021 ஆம் ஆண்டு முதல் வெளிவரக்கூடிய புதிய கார்கள் அனைத்திலும் முன்பக்கத்தில் இரண்டு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்ட இருக்கவேண்டுமென்று உத்திரவு விட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து கார்களிலும் ஓட்டுனர் இருக்கைக்கு ஏர்பேக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சகம் டிசம்பர் 2020 இல் ஜூன் 1 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து கார்களிலும் ஓட்டுநர் சீட்டின் முன்பக்க பயணிக்கும ஏர்பேக் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் உத்தர விட்டது.
சாலை விபத்தின்போது ஓட்டுனர் இருக்கைக்கு மட்டும் ஏர்பேக் போதுமானதாக இல்லை. திடீரென நடைபெறும் விபத்தில் முன்பக்கம் இருக்கையின் பயணிக்கு படுகாயம் அல்லது உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்கா எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. ஆகவே முன்பக்க பயணியின் இருக்கைக்கு ஏர்பேக்குகள் பொருத்துவது மிக அவசியமாக உள்ளது. எனவே இத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டது .மத்திய அரசின் இந்த புதிய உத்தரவின் காரணமாக தற்போது புதியதாக விற்கப்படும் அனைத்து கார்களுக்கும் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விலை உயர்வாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.