வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்தியாவிற்கு செல்லலாம்.
இந்தியாவைச் சேர்ந்த மக்கள் வெளிநாடுகளில் வேலை கல்வி போன்ற பல காரணங்களுக்காக வசித்து வருகின்றனர். அவர்கள் தன் நாட்டிற்கு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வெளிநாட்டில் வாழ்வதற்கான குடியுரிமையைப் பெற்றிருத்தல் வேண்டும்.அதனால் இந்தியாவிற்கு செல்ல உதவியாக இருக்கும் வெளிநாட்டை சேர்ந்த இந்தியர் என்ற ஓ.சி.ஐ என்று அழைக்கப்படும் அடையாள அட்டையை வழங்கியுள்ளது.
இந்த அட்டை வழங்கும் போது எந்த பாஸ்போர்ட்டின் எண் உள்ளதோ அதனை இணைத்தே ஓ.சி.ஐ அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் வெளிநாட்டைச் சேர்ந்த இந்தியர் எனும் ஓ.சி.ஐ அடையாள அட்டையை ஏற்கனவே வைத்திருப்பவர்களின் அட்டையில் புதிய பாஸ்போர்ட் எண் இணைக்கப்பட்டு இருப்பதில்லை. எனவே பல விமான நிலையங்களில் குடியுரிமை துறை அதிகாரிகள் அவர்களின் நாட்டிற்கு செல்வதற்கு அனுமதி வழங்கமறுத்துள்ளனர் .
இதனை தொடர்ந்து கடந்த வாரம் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் தன் தந்தையின் இறுதிச்சடங்கிற்கு வருவதற்காக அமெரிக்காவிலிருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த போது அவர் அமெரிக்காவை சேர்ந்த இந்தியர் என்ற ஓ.சி.ஐ அடையாள அட்டை பழைய பாஸ்போர்ட்டின் எண் இருந்ததால் அவரை இந்தியாவிற்கு செல்ல அனுமதிக்கவில்லை அதன் பிறகு இந்திய துணை தூதரகத்தின் உதவியால் இந்தியா செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
இது போன்ற வெளிநாட்டைச் சேர்ந்த இந்தியர்களின் இக்கட்டான சூழ்நிலையை மனதில் கருதி ஓ.சி.ஐ அடையாள அட்டையில் பழைய பாஸ்போர்ட்டின் எண் இருந்தாலும் விமான பயணம் தொடரலாம் என்றும் அதற்காக பழைய பாஸ்போர்ட்டை எடுத்து வர வேண்டிய அவசியம் இல்லை .
பழைய ஓ.சி.ஐ அடையாள அட்டையை சமர்ப்பித்து தற்போது இருக்கும் புதிய பாஸ்போர்ட்டை எண்ணை இணைத்து புதிய ஓ.சி.ஐ அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இச்சலுகையை இந்த வருடத்திற்கு உள்ளே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு பெற்றுக்கொண்டால் இந்தியாவிற்கு சென்று வருவதற்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்.