ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்ய ஊடகங்களுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது .மேலும் அவர்கள் பெண்களுக்கான உரிமைகளையும் பறித்து வருகின்றனர். இதில் பெண்கள் விளையாட்டில் ஈடுபடக்கூடாது ,பள்ளிக்கு செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியாவில் நடந்து வரும் இந்த ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பெண்களுக்கு எதிராக முடிவுகளை எடுத்து வரும் தலிபான்கள் தற்போது பெண்கள் ஐபிஎல் தொடரை பார்ப்பதாலும் ரசிகர்கள் ஆட்டம் போடுவதாலும் ஆப்கானிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப கூடாது என தடை விதித்துள்ளனர் .மேலும் ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று ஊடகங்களுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.