இந்தியாவில் மற்ற வங்கிகளை போல தபால் நிலையத்திலும் சிறந்த சலுகையுடன் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போதைய சூழலில் எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இதில் தபால் நிலையங்களும் தொடர்ந்து டிஜிட்டல் முறையாக மாறிவருகின்றது. அதுமட்டுமல்லாமல் தபால் நிலையங்களில் முதலீட்டாளர்கள் தபால் அலுவலகத்திற்கு செல்லாமல் தங்கள் மொபைல் பயன்பாடு மூலம் தபால் அலுவலகங்களில் உள்ள திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்த புதிய திட்டத்தை இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் வங்கி(ippb) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நீங்கள் ஒரு கணக்கை தொடங்கவேண்டும் .
மேலும் தபால் நிலையத்தின் மாத வருமான திட்டம் ஒரு மிகச் சிறந்த வருமானத்தை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் ஒரு முதலீட்டாளர் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறந்து அதில் 9 லட்ச ரூபாயை ஒரே நேரத்தில் டெபாசிட் செய்தால் ஒவ்வொரு மாதமும் 4950 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் .அதுமட்டுமல்லாமல் அசல் மீதான வருடாந்திர வட்டி ரூ. 59 , 400 அதன் சராசரி 6.6 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது. மேலும் உங்கள் வட்டியின் மாதாந்திர தொகை ரூ 4950 உள்ளது.
இந்த வட்டியை ஒவ்வொரு மாதமும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் .உங்கள் அசல் அப்படியே இருக்கும். நீங்கள் 18வயது ஆகும்போது இந்த ஜாயிண்ட் அக்கவுண்ட் அகற்றலாம் .மேலும் இதில் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் ஒரே கணக்கில் ஒரே நேரத்தில் மூன்று பெயர்கள் மட்டுமே இருக்க முடியும். அதுமட்டுமல்லாமல் பத்து வயது மேற்பட்ட குழந்தைகளின் பெயரிலும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாதுகாவலர்கள் தங்கள் பெயரில் இந்த அக்கவுண்டை திறக்க முடியும்.
தபால் நிலையத்தில் ஆன்லைன் கணக்கை திறக்க முழு செயல்முறையும் உங்கள் மொபைல் தொலைபேசியில்ipbp மொபைல் வங்கி பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.
ipbp மொபைல் வங்கி பயன்பாட்டை திறந்து openaccountஎன்பதை கிளிக் செய்கஉங்கள்pancart எண் மற்றும் ஆதார் அட்டை எண்ணை உள்ளிடவும்
பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் otpஐ உள்ளிடவும்.
உங்கள் தாயின் பெயர் ,கல்வித்தகுதி,முகவரி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தகவல்களை கொடுங்கள்.
முழுமையான தகவல்களை சமர்ப்பித்த பிறகு சமர்ப்பி என்பதை கிளிக் செய்து.
உங்கள் கணக்கு குறுகிய காலத்தில் தபால் நிலையத்தில் திறக்கப்படும்.
டிஜிட்டல் சேமிப்பு கணக்கு ஒரு வருடத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் .
வழக்கமான சேமிப்பு கணக்கு திறக்கப்படும் ஒரு வருடத்திற்குள் முழுமையான பயோமெட்ரிக் சான்றிதழ் பூர்த்தி செய்யவும்.