Categories
உலக செய்திகள்

இனிமே இந்த நாட்டுல எங்களால இருக்க முடியாது… நாட்டை விட்டு ஓடிய அதிகாரிகள்… என்ன காரணம்?…!!!

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானதால் அந்நாட்டு அதிகாரிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

ரஷ்யா தூதரக அதிகாரிகள் 8 பேர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 3 வயது சிறுமி உட்பட அனைவரும் பியோங்கியாங்கின் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தீவிரமான காரணத்தால் கையால் தள்ளப்பட்ட ரயில் வண்டியில் வடகொரியாவை விட்டு சென்றனர். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பெண்கள் மற்றும் சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டுள்ளன.இந்த தள்ளுவண்டி ரயில்வே பாலத்தின்குறுக்கே ரஷ்ய  மூன்றாம் செயலாளர் விளாடிஸ்லாவ் சொரோகின் தள்ளிச் சென்றார்.

இவ்வாறு இவர்களின் தள்ளுவண்டி ரயில் பயணம் பியோங்கியாங்கிலிருந்து சுமார் 32 மணிநேரம் தொடங்கியது.பிறகு எல்லையை அடைவதற்கு இரண்டு மணி நேரம் பேருந்திலும் பயணித்துள்ளார். தாயகத்தை நோக்கி செல்வதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றனர். தாயகம் செல்வதற்கான இந்த பயணம் நீண்ட மற்றும் மிகக் கடினமான பயணமாக இருந்தாலும்  மிக மகிழ்ச்சியாக பயணத்தை மேற்கொண்டோம் என்று கூறினார்கள். பயணத்தில் இறுதியாக மிக முக்கியமான பகுதி ரஷ்யாவிற்கு கால்நடையாக நடந்து சென்றோம் என்றும் கூறினார்கள்.

இந்த தள்ளு வண்டியின் என்ஜினாக செயல்பட்டவர்  சொரோகின் என்ற ஆண்மகன் இவர் ஒரு கிலோமீட்டருக்கும் மேல் ரயில் தள்ளுவண்டியை தள்ளிக் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஷ்ய எல்லைக்குள் அவர்கள் வந்தவுடன் அவர்களை சந்தித்த வெளியுறவு அமைச்சகம் அவர்களை பேருந்து மூலம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்தது. முதன் முதலில் சீனாவில் உருவாக்கி பின்னர் உலகத்தையே ஆட்டிப் படைத்த கரோனா வைரஸ் வடகொரியாவில்  பரவாமலிருக்க கடந்த கடந்த ஆண்டு ஜனவரியில் முழுமையான மிகவும் கடுமையான தடைகளை விதித்து உத்தரவிட்டது.

மேலும் அணுஆயிதம் பொருளாதார தடைகள் மற்றும் விமான போக்குவரத்து என அனைத்தும் தடை செய்யப்பட்டது. ஊழியர்கள் மற்றும் பொருள்கள் நுழைய முடியாத நிலையில் கட்டுப்பாடுகள் தூதாண்மை  அதிகாரிகள் மற்றும் உதவி தொழிலாளர்களின் நடவடிக்கைகளுக்கு கடுமையான தடைகள் இருந்தால்  மேற்கதித்ய தூதர்கள் முழு ஊழியர்களையும் வட கொரியாவில் இருந்து திரும்ப வருமாறு அழைப்பு விடுத்தனர். ரஷ்யா மற்றும் வடகொரியா நெருங்கிய உறவை கொண்டுள்ளதால் அவற்றின்  தூதாண்மை இருப்பையும் ரஷ்யா பேணியுள்ளது.

வடகொரியா தலைமைத்துவம் வளாகத்திற்கு பக்கத்தில் மத்திய பூங்காவின் ஒரு பிரதானமான மாஸ்கோ இன்னும் ஒரு பெரிய தூதரகத்தை கொண்டுள்ளதால் தள்ளுவண்டியில் புறப்பட்ட குழு அவர்களின் தாயகத்திற்கு திருப்பி அனுப்பியது. இவ்வாறு தள்ளுவண்டி மூலம் பயணம் செய்த ரஷ்ய குழு திரும்பிய வினோத விதத்தை தென்கொரியாவில் ஆன்லைன் மூலம் மக்கள் மகிழ்ச்சியுடனும் கேலி கிண்டல் ளுடனும் ரசித்தும்  விமர்சித்தும்  வருகின்றனர்.

நல்லவேளை “நான் வடகொரியாவில் பிறக்கவில்லை என்று மகிழ்ச்சி அடைகிறேன்” இவ்வாறு ஒருவர் தென் கொரியாவின் மிகப்பெரிய இணையதளமான நாவரில் தெரிவித்துள்ளார். இன்னும் கேலியாக மற்றொருவர் “தள்ளுவண்டியை தயவுசெய்து எடுத்த இடத்தில் வைத்து விடுங்க “என்று கூறியுள்ளார்.

Categories

Tech |