புதிய சைபர் க்ரைம் குற்றப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் என்பவர் சைபர் குற்றங்களை விசாரிப்பதற்காக புதியதாக சைபர் குற்றப்பிரிவுகளை அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலங்களில் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறும்போது தற்போது தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இணையதளம் மற்றும் செல்போன்களின் பயன்பாடுகள் அதிகரித்துவிட்டது. ஆகையால் பொது மக்களுக்கு செல்போன்களின் பயன்பாடுகள் மிகவும் இன்றியமையாதவைகளாக மாறிவிட்டதால் வெளியில் நடக்கும் குற்றங்கள் போலவே இணையதளத்திலும் பல்வேறு குற்றங்கள் நடந்து வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அந்த மாதிரியான புகார்கள் அடிக்கடி காவல் நிலையத்திற்கு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார். எனவே அந்த மாதிரியான குற்றங்களை தடுப்பதற்காகவும், விசாரிப்பதற்காகவும், ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் சில காவல்துறையினரும் இணைந்து சைபர் குற்ற பிரிவுகளை விசாரிப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொதுமக்களில் யாருதாவது செல்போன் காணாமல் சென்று விட்டால் அதனை காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை நீங்கள் உடனடியாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் போலியான தொலைபேசி செய்தியை நம்பி பணம் ஏமாறுபவர்கள் ஏ.டி.எம். கார்டு எண் கேட்டு வரும் போலியான அழைப்புகள், சமூக வலைத்தளங்களில் அவதூறாக செய்திகள் பரப்புவர் மற்றும் இணையதளம் மூலமாக வேலை வாங்கித் தருவோம் என்று கூறி ஏமாற்றுபவர்களின் மீது சைபர் க்ரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.