Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப் போவதில்லை’… நடிகை சமந்தா முடிவு…!!!

‘இனிமேல் கவர்ச்சியாக நடிக்கப்போவதில்லை’ என நடிகை சமந்தா முடிவு செய்துள்ளார். 

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா திருமணத்திற்குப் பின்னும்  படங்களில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சினிமா வாழ்க்கை குறித்து நடிகை சமந்தா பேட்டி அளித்துள்ளார் . அதில் ‘நான் சினிமா துறைக்கு வந்த புதிதில் நடித்த படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்கள் அமைந்தன . அந்த நிலைமை இப்போது மாறி இருக்கிறது . நடிப்புத் திறமையை வெளியே கொண்டு வரும் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன் . நடிகையாக நான் எவ்வளவு உயரத்துக்கு போனாலும் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு பதற்றமாக இருக்கும்.

இனி கவர்ச்சி இல்லை - சமந்தா திட்டவட்டம்

படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்து நடிக்க ஆரம்பித்ததும் எதிர்பாராத பயம் என்னை துரத்தும் . இயக்குனர்,  கேமராமேன் ஏதாவது சொன்னால் என்னுடைய பதற்றம் இன்னும் அதிகரித்துவிடும் . ஆனால் அதை யாருக்கும் தெரிகிற மாதிரி நான் காட்டிக்கொள்ள மாட்டேன் . அந்த பயத்திற்கு காரணம், புதிய நடிகையாக அந்த கதாபாத்திரத்திற்கு செல்ல வேண்டும் என்ற உணர்வும். ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடிக்க வேண்டும் என்ற வெறியும் தான் ‌. பத்து வருடங்களாக சினிமாத்துறையில் இருக்கிறேன் . இனிமேல் கவர்ச்சியாக நடிக்காமல் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன்’ என்று கூறியுள்ளார் .

Categories

Tech |