Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற சிறப்பு முகாம்…. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கென கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் தாயில்பட்டி, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். அதன் பின் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 1300 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |