சில நபர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி மிக வேகமாக குறைந்து வருவதை முன்னிட்டு வயதானவர்களுக்கும், கொரோனாவின் பிடியில் சிக்கி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கும் கூடுதலாக ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஜெர்மனி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
ஜெர்மனியில் வைத்து அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் உட்பட 16 மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சில பொதுமக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி மிக வேகமாக குறைந்து வருகிறது.
இதனால் வயதானவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை கூடுதலாக ஒரு டோஸ் செலுத்த வேண்டும் என்பதாகும்.
மேலும் இவ்வாறு கொரோனா குறித்த கூடுதல் டோஸ்ஸை பெறுபவர்கள் முதலில் எந்த தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்த கவலை வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.